நாம் தமிழர் கட்சியை தடை செய்யக்கூடாது, அப்படி செய்தால் அனைத்து கட்சிகளையும்தான் தடை செய்ய வேண்டும் என பிரேமலதா பேசியுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜிவ் காந்தி மரணம் குறித்து பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
சீமானின் இந்த பேச்சு தமிழக அரசியல் சூழ்நிலையில் கடுமையான அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. சீமானைத் தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் அங்கிகாரததை நீக்க வேண்டும் எனவும் கோரியது.
இது குறித்து தற்போது பிரேமலதா விஜயகாந்த பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ராஜீவ் காந்தி கொலை தொடர்பான சீமானின் பேச்சுகள் ஏற்றுக் கொள்ள முடியாது. அது தவறானது.
கமல்ஹாசனும் கூட இதேபோல் தான் பேசி வருகிறார். ஆனால், இதற்காக சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்யக்கூடாது. அப்படி செய்தால் அனைத்து கட்சிகளையும்தான் தடை செய்ய வேண்டும் என கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.