சீமான்-லாம் ஒரு ஆளா... துரைமுருகன் டக் லைஃப்!!

வியாழன், 17 அக்டோபர் 2019 (10:19 IST)
சீமானை எல்லாம் அரசியல்வாதியாக நான் கருதவேயில்லை என, தனது வழக்கமான கிண்டலுடன் விமர்சித்துள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன். 
 
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜீவ் காந்தி மரணம் குறித்து பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது.  
 
சீமானின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் சூழ்நிலையில் கடுமையான அதிர்வலைகளை எழுப்பியது. அரசியல் தலைவர்கள் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
ஆனால் என்ன நடந்தாலும் தனது கருத்தில் இருந்து பின்வாங்குவதாக இல்லை சீமான். என்னை கைது செய்தாலும் அதை பற்றி நான் கவலைப்படப்போவது இல்லை, இதுபோன்று பல வழக்குகளை நான் சந்தித்துவிட்டேன். எனக்கு இது ஒன்றுமே இல்லை என அசால்டாக பதில் அளித்தார். 
 
இந்நிலையில் சீமான் பேசியது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தது பின்வருமாறு, சீமானை எல்லாம் அரசியல்வாதியாக கருதி, அவரை பற்றி பேசி தனது தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை.
பொதுவாக இறந்த தலைவர்களை பற்றி விமர்சிப்பது அரசியலில் நாகரீகமற்றது. அப்படி விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் இருப்பதை வெட்கக்கேடானதாக நான் கருதுகிறேன் என தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில தினகங்களாக சீமான் பேசியது தமிழக அரசியலில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், துரைமுருகன் இதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் தனது ஸ்டைலில் விமர்சித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்