'வாழும் புரட்சி தலைவரே' - எம்.ஜி.ஆர் கெட் அப்பில் ஈபிஎஸ்!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (12:56 IST)
'வாழும் புரட்சி தலைவரே' என எடப்பாடி பழனிச்சாமிக்கு கரூரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 

 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில், கரூர் அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராகவும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராகவும் இருக்கும் முத்துக்குமார் எடப்பாடி பழனிசாமிக்கு கருப்புக் கண்ணாடியும் வெள்ளைத் தொப்பியுடன் படத்தைப் போட்டு 'வாழும் புரட்சி தலைவரே' என்ற வாசகத்துடன் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் கட்-அவுட் வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்