ட்விட்டரில் வன்முறை, ஆபாச பதிவுகளை தடுக்க கோரிய வழக்கில் விளக்கமளிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி விவசாய போராட்டம் குறித்து சமீபத்தில் ட்விட்டரில் பலர் பதிவுகள் இட்டு சண்டையிட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களின் கணக்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால் ட்விட்டர் அதில் 500 கணக்குகளை மட்டுமே முடக்கியது, இதனால் ட்விட்டர் நிறுவனம் இரட்டை மனநிலையுடன் செயல்படுவதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் வன்முறையை தூண்டும், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் ட்விட்டரில் இடம்பெறும் பதிவுகளை நீக்கும் வகையில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.