ஒரு மாதத்திற்கு பிறகு காவிரி பற்றி பேசலாம்... இப்ப என்ன அவசரம்?

Webdunia
வியாழன், 17 மே 2018 (12:43 IST)
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என எதிர்ப்பார்த்து வந்த நிலையில், இன்று பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ளார். 
 
இதற்கு காங்கிரஸ் மற்றும் மதசார்பர்ற ஜனதாதள கட்சி எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால், எடியூரப்பவோ தனது பணிகளை துவங்கியுள்ளார். முதல் கையெழுத்தாக விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். 
 
இந்நிலையில் பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தது மகிழ்ச்சி. கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளதால் காவிரி நீர் நிச்சயம் தமிழகத்திற்கு வரும்.
 
காவிரிநீர் விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது. சேலையை முள்ளில் போட்டது திமுக. அது சுக்கு நூறாக வேண்டும் என்பதும் அதன் எண்ணம். பாஜக எந்தெந்த மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளதோ, அங்கெல்லாம் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
 
ஒரு மாதத்திற்கு பிறகு காவிரிநீர் விவகாரம் குறித்து கர்நாடக அரசிடம் பேச உள்ளேன் என கூறியுள்ளார். பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் காவிரிநீர் தமிழகத்திற்கு வருகிறதா என்று....

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்