உங்களை சந்திக்கவே வந்துள்ளேன் - மக்கள் முன்னிலையில் கமல்ஹாசன் பேச்சு

Webdunia
வியாழன், 17 மே 2018 (12:18 IST)
நெல்லை மாவட்டத்தில்,  சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன், பணகுடி பகுதியில் பொதுமக்ளிடையே பேசினார். மக்களாகிய உங்களை நான் அறிந்து கொள்வதற்கான பயணம் இது என்றார்.

 
தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன் நேற்று தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார். நேற்று முழுவதும் அவர் கன்னியாகுமாரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். 
 
இந்நிலையில், இன்று நெல்லை மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று காலை நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி என்ற கிராமத்தில் மக்களைச் சந்தித்து பேசினார். அப்போது, மக்களின் தேவை அறியாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பதாலேயே உங்களை சந்திக்க வந்துள்ளேன். மக்கள் நீதி மய்யம் முக்கிய பாதையில் செல்கிறது. இனி அடிக்கடி உங்களை தேடி வரும் இந்த பயணம் நிகழும் மக்களை தரிசிப்பதற்காகவே இந்த பயணம் என கூறினார் கமல். 
 
நீங்கள் 50 வருடங்களாக என்னைப் பார்த்து வருகிறீர்கள். இப்போது உங்களைப் பார்க்க நான் வந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். முன்னதாக நேற்று கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல், சாலை விபத்தில் சிக்கி அடிப்பட்ட பெண் ஒருவரை மீட்டு, அவரை தனது வாகனங்களில் ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சி. ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்..

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்