பொள்ளாச்சி விவகாரம் :குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து ! அடுத்து என்ன நடக்கும் ?

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (18:42 IST)
சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ,வீடியோ எடுத்து மிரட்டியதாக  வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர்  பார் நாகராஜனை போலிஸார் விடுவித்தனர். இந்த சம்பவத்தை அவ்வளவு  எளிதில் யாராலும் மறக்க முடியாது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் மீது கோவை ஆட்சியர் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவை தற்போது ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 
நீதிமன்றத்தில் இந்த முடிவு அனைத்துத்  தரப்பினருக்கும் மிகுந்த அதிர்ச்சி அளித்துள்ளது.
 
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அதில்,குண்டர்சட்டத்தில் கைது செய்யும் போது என்னென்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்  என்று ஏற்கனவே நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது.அந்த தீர்ப்புகளை எல்லாம் முற்றிலும் புறக்கணித்து  இந்த வழக்கில் சிக்கியுள்ள முக்கிய குற்றவாளிகளை தப்ப விட வேண்டும் என  உள்நோக்கத்தோடு காவல்துறை செயல்பட்டுள்ளது.
 
இளம்பெண்களின் எதிர்காலத்தைச் சீரழித்த கழிசடைக் கலாச்சாரக் கயவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு , கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என  வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஹெல்மெட் முதற்கொண்டு எத்தனையோ விசயங்களில் கறாராக  நடந்து கொண்ட நீதிமன்றம் இந்த விசயத்தில் இத்தனை நாட்களாக விசாரித்து வந்தாலும் கூட, இன்று குண்டர்சட்டத்திலிருந்து நால்வரும் விடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. தமிழர்களை கோபம் எழச் செய்துள்ளது.
 
ஸ்டாலின் சொன்னதுபோல் பொள்ளாச்சி சம்பவத்தில் சம்பவப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு இவ்வழக்கை நீர்த்துப் போகச் செய்துள்ள அதிகாரிகள் மீது முதலாவது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நெட்டிசன்களும் கூறிவருகின்றனர்.
 
குற்றவாளிகளே தங்கள் குற்றத்தை ஒப்புகொண்டாலும் கூட அவர்களை நிரபராதிகளாக மாற்றுவதற்காக சில கறுப்பு ஆடுகள் பதுங்கி உள்ளதுதான் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை நிகழ்த்தியவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 
 
நிச்சயமாக ஒவ்வொரு வீட்டிலும் உள்ள தொலைக்காட்சி, அலைபேசி, இணையதளம், ரேடியோ, செய்தித்தாள் ஆகியவற்றின் மூலம் இந்த சம்பவம் நடந்த அன்றே பலரும் தங்களுக்குத் தெரிந்த அளவில் விவாதித்து வந்திருப்பார்கள் ஆயினும், அப்போது பரப்பப்பட்ட யூகங்களை உடைத்து சில அரசியல தலையீடுகள் உள்ளது உண்மைதான் என்ற கண்ணோட்டத்தையும் இப்போது ஊர்ஜிதமாக்கியுள்ளது.

இந்த மாதிரியான பாலியல் வக்கிரமான சம்பவங்கள், இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமானால், இந்த பொள்ளாச்சி வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டணை வழங்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதை நீதிமன்றம் நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்து  பார்க்கலாம் !

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்