இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், நேற்று பங்குச் சந்தை மிகப்பெரிய அளவில் சரிந்தது. ஆனால் இன்று இந்தியாவில் பங்குச் சந்தைகள் எழுச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பங்குச் சந்தை, ஜப்பான் பங்குச் சந்தை, ஹாங்காங் பங்குச் சந்தை ஆகியவை இன்று காலை முதல் எழுச்சியுடன் விற்பனையாகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் ஐரோப்பிய பங்குச் சந்தை இன்னும் வீழ்ச்சியிலிருந்து எழவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரி விதிப்பு முறையை திரும்ப பெறத் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும், இதனால் வர்த்தக போர் நீடித்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.