பொள்ளாச்சி வழக்கு: குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் ரத்து!

வெள்ளி, 1 நவம்பர் 2019 (12:59 IST)
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டியது தொடர்பாக வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர்  பார் நாகராஜனை போலிஸார் விடுவித்தனர். 
 
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் மணிவண்ணன் என்பவர் போலீஸாரிடம் சரணடைந்தார். அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் கூறப்பட்டுவந்தது. 
 
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் மீது கோவை ஆட்சியர் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவை தற்போது ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 
ஆம், குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்கள் தெளிவில்லாமல் உள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குண்டர் சட்டத்தில் அடைத்தது தொடர்பாக ஆவணங்கள் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்