”போலீஸ் மிரட்டியதால் தீக்குளித்தேன்!”- புழல் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (14:15 IST)
திருவள்ளூரில் வாடகை பிரச்சினையில் தீக்குளித்தவர் காவலர்கள் நடவடிக்கையே காரணம் என வாக்குமூலம் அளித்ததால் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் பாலவிநாயகர் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சீனிவாசன். இவருக்கும் வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் என்பவருக்கும் வாடகை விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜேந்திரன் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விசாரிக்க வந்த காவல் ஆய்வாளர் சீனிவாசனிடம் மிரட்டும் போக்கில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த சீனிவாசன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 88 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள சீனிவாசன் தான் தீக்குளிக்க காவல் ஆய்வாளரின் நடவடிக்கையே காரணம் என வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சீனிவாசனை விசாரிக்க சென்ற புழல் காவல் ஆய்வாளர் பென்சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்