அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

Siva
செவ்வாய், 25 ஜூன் 2024 (20:59 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் வி ஜே பாஸ்கர் திடீரென தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரமாக வலை வீசி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ’வாங்கல் பகுதியை சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா என்பவர், தனது சொத்தை 4 பேருக்கு விலைக்கு விற்க வந்தபோது அவருடைய சொத்தின் அசல் ஆவணம் தொலைந்துவிட்டதாகக் கூறி, சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சிஎஸ்ஆர் நகலை ஆவணதாரர் சார்பாக யுவராஜ், பிரவீன் ஆகியோர் அளித்ததாகவும், ஆனால் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்டதாக கூறப்படும் சான்றிதழ் போலியானது என்று ஷோபனாவின் தந்தை பிரகாஷ் புகார் தெரிவித்தார். 
 
மேலும் யுவராஜ், பிரவீன் ஆகியோர் தனது அலுவலகத்துக்கு வந்து, அரசியல் அதிகாரம் மிக்க நபருக்காக இந்த நிலம் பதிவு செய்யப்பட்டதாகவும், கிரயம் செய்த பத்திரத்தை ஒப்படைக்கவில்லை என்றால், உயிருக்கும் பாதுகாப்பு கிடையாது என்றும் கூறி மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த நில மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஷோபனாவின் தந்தை பிரகாஷ் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி ஆனதால் அவர் தலைமறைவானதை தொடர்ந்து அவரை சிபிசிஐடி போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்