தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்!

J.Durai

செவ்வாய், 25 ஜூன் 2024 (14:58 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளை கண்டித்து  திமுக அரசை தேமுதிக மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த ஆர்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து தமிழக முதல்வர்  பதவி விலக கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். 
 
கள்ளச்சாராயத்தை இரும்பு கரம் கொண்டு எப்படி அடக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் கண்டனம் முழக்கமிட்டனர்.
 
ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து பதாகைகள் ஏந்தி தமிழக  முதல்வருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் 
 
இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஏராளமான கழகத் தொண்டர்கள் மகளிர் அணி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்