பதவியேற்ற பின் வாழ்க உதயநிதி என கோஷமிட்ட திமுக எம்.பிக்கள்!

Mahendran

செவ்வாய், 25 ஜூன் 2024 (16:59 IST)
நாடாளுமன்றத்தில் இன்று தமிழக எம்பிகள் பதவி ஏற்ற நிலையில் அவர்களில் திமுக எம்பிக்கள் வாழ்க உதயநிதி என்று கூறி பதவி ஏற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
18 வது நாடாளுமன்ற கூட்டம் நேற்று கூடிய நிலையில் நேற்று பிரதமர் மோடி உள்பட பல எம்பிக்கள் பதவியேற்றனர். இன்று தமிழக எம்பிகள் பதவியேற்ற நிலையில் அவர்களில் திமுக எம்பிக்கள் பதவியேற்ற போது வாழ்க முன்னாள் முதல்வர் கருணாநிதி, வாழ்க முதல்வர் ஸ்டாலின், வாழ்க உதயநிதி என்று கோஷமிட்டனர். 
 
மேலும்  திமுக எம்பி களான கனிமொழி, டிஆர் பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராச்சாமி அவர்களை தவிர  மற்ற அனைத்து எம்பிகளும் அமைச்சர் உதயநிதி வாழ்க என்று பதவியேற்ற பின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேலும் சில எம்பிகள் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு வாழ்க என்று பதவியேற்ற பின் கோஷமிட்டார்கள் அதேபோல் கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத் தெலுங்கில் பதவி ஏற்று கடைசியில் தமிழில் நன்றி வணக்கம் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்