சாலையில் தூங்குபவர்களை கொல்லும் சைக்கோ! – சேலத்தில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (12:12 IST)
கோப்புப்படம்

சேலத்தில் சாலையில் உறங்குபவர்களை மர்மமான முறையில் சைக்கோ கொலையாளி ஒருவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு சாலையோரம் படுத்து உறங்கும் ஆதரவற்ற முதியவர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் மீண்டும் ஒரு முதியவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர் கொலை சம்பவங்களால் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மர்மமான ஒரு நபர் சாலை உறங்கி கொண்டிருந்தவரை கொடூரமான முறையில் கொன்றுவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளான்.

உடனடியாக தனிப்படை அமைத்துள்ள போலீஸார் சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்