அவர் சொன்னதுக்கு நாங்க பொறுப்பு இல்ல! – ஜெயக்குமார் கறார்!

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (11:30 IST)
Minister Jayakumar

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுகவின் கருத்து கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சமீபத்தில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமிய அமைப்புகள் தமிழகத்தில் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும், இப்படியே செய்து கொண்டிருந்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாரும் தடுக்க முடியாது என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளதாகவும், அதற்காக அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆளுனரிடம் முறையிட போவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சியின் கருத்து அல்ல! அப்படியிருக்க இதுகுறித்து ஆளுனரிடம் எந்த அடிப்படையில் முறையிட முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்