தொண்டர்கள் கலைந்து செல்ல போலீஸ் வேண்டுகோள்: காவேரி மருத்துவமனையில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 29 ஜூலை 2018 (22:40 IST)
கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்து கொண்டே இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இதனையடுத்து காவேரி மருத்துவமனை முன்பு திரண்டிருக்கும் தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று காவல்துறையினர் திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 
கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் மருத்துவர்கள் வருகை தரவுள்ளதால் அவர்களுக்கு வழிவிடுமாறு தொண்டர்களுக்கு போலீஸ் வேண்டுகோள்  விடுத்துள்ளது.
 
இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்த தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் காவேரி மருத்துவமனையில் இருந்து சற்றுமுன் புறப்பட்டார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்