திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் தற்காலிமாக சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளித்த பின் அவரது உடல்நிலை சீராகி உள்ளது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தலைவர் கருணாநிதி நல்ல நிலையில் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.