கருணாநிதி இன்னும் பல்லாண்டுகள் வாழ்வார் - பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ்

ஞாயிறு, 29 ஜூலை 2018 (11:54 IST)
சிறுநீரக தொற்று, ரத்த அழுத்தம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நலம் விசாரித்தனர்.
திமுக தலைவர் உடல்நிலை மோசமானதால் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவரது உடல்நிலையில் தேர்ச்சி உள்ளதாகவும் விரைவில் இயல்பு திரும்புவார் என்று காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தனர்.
 
இந்நிலையில் காவேரி மருத்துவமனைக்கு வந்த தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் கூறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளிதரராவ், கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழக மக்களுக்கு கருணாநிதிதி சிறப்பான சேவை புரிந்துள்ளார். விரைவில் அவர் நலம் பெறுவார். மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் சேவை புரிய வேண்டும் என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்