சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும்: பாமக எம்எல்ஏ ஆவேசம்..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (14:52 IST)
இன்று சட்டப்பேரவையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியை காண டிக்கெட் வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து வரிசையில் காத்திருக்கின்றனர். 
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த அணியில் தமிழர்களே இல்லை என்றும் பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் கூறியுள்ளார். தமிழர்களே இல்லாத அணியை விளம்பரம் செய்து லாபம் ஈட்டுகின்றனர் என்று அவர் சட்டப்பேரவையில் இன்று விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் பேசியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்