இதற்கு, ஆளுங்கட்சி, எதிர்கட்சி தலைவர்கள் விமர்சனம் தெரிவித்தனர். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலலைமையிலான திமுக அரசு இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, அதன் ஒப்புதலுக்காக ஆளுனருக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தல்களுக்குப் பிறகு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கதக்கது. தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், அமமுக சார்பிலும் ஆளுநருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.