இன்னும் சில மணி நேரங்களில் வலுவடையும் புரெவி! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (09:13 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் தென் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் மேலும் வலுவடைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் தீவிரமடைந்த நிலையில் புயலாக மாறியுள்ளது. புரெவி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தென் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தற்போது பாம்பனிலிருந்து 530 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் 5 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், கேரள பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்