சென்னை மதுரவாயல் அருகே கிருமி நாசினி தெளிப்பது போல் ஏடிஎம் நடித்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வங்கி ஊழியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரவாயல் அருகே உள்ளா ஏடிஎம் காலனி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஒரு மர்ம நபர் ஏடிஎம் மெஷினை சாவி போட்டுத் திறந்து பணத்தைதிருடிச் சென்றான். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் கொள்ளையனை பிடிக்க அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதன்பின் மேற்கொண்ட பலகட்ட விசாரணையில் அம்பத்தூர் கிளையில் பணியாற்றி வந்த சிவானந்தன் என்ற ஊழியர் பணத்தை திருடியதை கண்டுபிடித்தனர். அவர் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த பணம் ரூ 9 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.