ரூ.100 க்கு., பதிலாக ... ரூ. 500 நோட்டுகளை வழங்கிய ஏடிஎம் மெஷின்... அதிகாரிகள் திணறல் !

சனி, 11 ஜனவரி 2020 (17:40 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சற்று தொலைவில் உள்ள மடிகேரி என்ற ஊரில் வைக்கப்பட்டிருந்த பிரபல கனரா வங்கியின் ஏடிஎன் மெஷினில் இருந்து மக்கள் பணம் எடுக்கும்போது,100 ரூபாய் நோட்டுக்களை பதிவிட்டால் அது ரூ. 500 தாள்களை வழங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது :
 
மக்கள் இன்று இந்த ஏடிஎம் மெஷினைப் பயன்படுத்தியபோது, அதில் இருந்து ரூ. 100 தாள்களுக்குப் பதிலாக ரூ. 500 நோட்டுகளை வழங்கியதால் மக்கள் பெரும்பாலானோர் லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்தப் பணத்தை மக்களிடம் இருந்து திரும்ப பெருவதற்கு அதிகாரிகள் சிரமத்திற்கு ஆளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்