அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரிக்கு சென்றபோது, மரியாதை நிமித்தமாக கூட முதல்வர் ரங்கசாமியை சந்திக்கவில்லை என்றும், இதனால் புதுச்சேரியில் கூட்டணி மாறலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் புதுச்சேரியில் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் என்.ஆர். காங்கிரஸ் இணைந்து கூட்டணியில் போட்டியிட்டது. அதன் பிறகு, கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. திடீரென வெளியேறிய நிலையில், தற்போது மீண்டும் கூட்டணி வைத்துள்ளது.
இந்த நிலையில், விழுப்புரம் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த எடப்பாடி பழனிசாமி புதுச்சேரியில் தங்கினார். அப்போது மரியாதை நிமித்தமாக கூட இருவருடைய சந்திப்பு நடைபெறவில்லை. எனவே, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி இருக்காது என்று கூறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே விஜய் உடன் ரங்கசாமி நெருக்கமாக இருக்கும் நிலையில், வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் ஏற்கனவே விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இருப்பதால், அ.தி.மு.க. - பா.ஜ.க.வுடன் கூட்டணியுடன் சேர்வதை விட விஜய்யுடன் கூட்டணி சேர்வதுதான் நல்லது என்று ரங்கசாமி நினைப்பதாக கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.