பொதுமக்களை கட்டையால் அடித்து விரட்டிய மதிமுகவினர்: சென்னையில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 25 மார்ச் 2018 (21:26 IST)
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த மக்களுக்கு, அப்பகுதியில் உள்ள இடுகாடு அருகே குடியிருப்புகள் கட்டித்தருவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் தலைவர்களின் நினைவிடம் இருப்பதாகவும், அதனால் அங்கு குடியிருப்பு கட்டக்கூடாது என்றும் வைகோ தெரிவித்தார். வைகோவின் இந்த கருத்துக்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பகுதிக்கு வரவிருக்கும் குடியிருப்புக்கு வைகோ இடைஞ்சலாக இருப்பதாக கூறிய அப்பகுதி மக்கள், எழுப்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமாக தாயகத்தை முற்றுகையிட முயன்றனர்.

ஆனால் மதிமுகவின் தாயகத்தில் இருந்த அந்த கட்சியின் நிர்வாகிகள் கட்டைகளை கொண்டு பொதுமக்களை தாக்கி, விரட்டியடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் மதிமுகவினர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்