தி.நகர் சரவணா ஸ்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல் ; பொதுமக்கள் வெளியேற்றம்

சனி, 24 மார்ச் 2018 (16:44 IST)
சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் கடைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
சரவணா ஸ்டோர் நிறுவனம் சென்னை, நெல்லை உட்பட பல ஊர்களும் கடைகளை திறந்துள்ளனர். சென்னையில் மட்டுமே பல இடங்களில் இவர்களின் கிளை இருக்கிறது. அனைத்தும் ஓரே இடத்தில் வாங்க முடியும் என்பதால் இந்த கடைகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
 
குறிப்பாக சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் மிகவும் பிரபலமானது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.
 

இந்நிலையில், இந்த கடைக்கு சில மர்ம நபர்கள் இன்று மாலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு தளத்திலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்த விவகாரம் ரங்கநாதன் தெருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்