தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

J.Durai
சனி, 5 அக்டோபர் 2024 (13:40 IST)
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரக்கூடிய 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
 
மாநாட்டிற்கு பந்தல் கால் நடும் விழாவானது நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.
 
அதன் படி  விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் தேர்வு செய்யப்பட்ட 85 ஏக்கர் நிலப்பரப்பில் பந்தகால் நடும் விழாவானது அக்கட்சியின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. 
 
பந்த கால் நடும் விழாவில் கும்பகோனம், தஞ்சாவூத், திருப்பூர், வேலூர் ஊட்டி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நிர்வாகிகள் தங்கல் ஊரில் உள்ள முக்கிய கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு பந்த கால் நட்ட இடத்தில் ஊற்றப்பட்டது. பந்தல் காலினை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடைபெறும் இடத்தில் நட்டார். 
 
பந்த கால் நடும் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பந்த கால் நட்ட இடத்தில் செல்பி எடுத்து கொண்டு சென்றனர். பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்