இன்று மாதத்தின் கடைசி நாள் என்பதால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. இந்த சரிவு மேலும் தொடர வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று, ஒரு கிராம் 22 காரட் தங்கம் 40 ரூபாய் குறைந்துள்ளது என்பதும், ஒரு சவரன் தங்கம் 320 ரூபாய் குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கம் போலவே வெள்ளி விலையில் ஒரு கிலோவுக்கு ரூ.2000 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், இன்று ஏற்பட்ட இந்தச் சரிவு முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் உற்று நோக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் , வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,210
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,170
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,680
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,360
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,047
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,003
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,376
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,024
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.125.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.125,000.00