6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை! நாளை முதல் 25% வரியா?

Mahendran

வியாழன், 31 ஜூலை 2025 (11:03 IST)
ஈரானுடன் வணிக தொடர்புகளை மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
மத்திய கிழக்கில் மோதல்களுக்கு ஈரான் நிதியுதவி அளிப்பதாகவும், அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாக, ஈரானுடன் எந்த நாடும் வர்த்தகம் மேற்கொள்ளக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
 
இந்த எச்சரிக்கையை மீறி ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை வாங்கிய 20 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதில் இந்தியா, துருக்கி, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் அடங்கும்.
 
அமெரிக்கா தடை விதித்துள்ள 6 நிறுவனங்களின் பெயர்கள் இதோ:
 
காஞ்சன் பாலிமர்ஸ் 
 
அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ்
 
ராம்னிக்லால் எஸ். கோசலியா & கோ 
 
ஜூபிடர் டை கெமிகல் பிரைவேட் லிமிடெட்
 
அதேபோல், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட் (
 
பெர்சிஸ்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் 
 
ஏற்கெனவே, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். தற்போது, இந்திய நிறுவனங்களை நேரடியாக குறிவைத்து அமெரிக்க அரசு இந்த தடை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்