அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (13:13 IST)
அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுகவின் பண்ருட்டு ராமச்சந்திரனுக்கு கூடுதல் பதவி அளித்துள்ளதாக ஓ பன்னீர்செல்வம் சற்றுமுன் தெரிவித்துள்ள நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்
 
இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களில் அதிமுகவிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 
 
அரசியல் ஆலோசகராக ஓபிஎஸ் அவர்களால் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமித்த நிலையில் எடப்பாடிபழனிசாமி அதிரடியாக அவரை கட்சியிலிருந்து நீக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பழம்பெரும் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரும் தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாக அதிமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்