அதற்கு அவர், தீவிரவாத்தில் ஈடுபாடுள்ளவர்கள், சட்டத்தைக் கையில் எடுப்பவர்களுக்கு இந்த அரசைப் பற்றிப் பயமில்லை; வெடிகுண்டு கத்திச் கலாச்சம் ஓங்கியுள்ளது. இந்தச் செயல்கள் மீது அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்தால்தான் அமைதி நிலவும். இந்த நடவடிக்கைகள் எடுக்குமளவு அரசுக்குத் திராணியில்லை என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை;இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளானர். பருவமழை விரைவில் வரவுள்ள நிலையில், சென்னையில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இப்பள்ளங்களே அவர்களுக்கு எமனாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.