ஓபிஎஸ் தேர்தல் பணிமனையில் மோடி, அண்ணாமலை புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (12:18 IST)
ஓபிஎஸ் தேர்தல் பணிமனையில் மோடி, அண்ணாமலை புகைப்படம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. 
 
இதனால் இரு அணிகளில் எந்த அணிக்கு இரட்டை இலை கிடைக்கும் அல்லது சின்னம் முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் கடந்து சில நாட்களுக்கு முன்னால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியின் பணிமனை திறக்கப்பட்ட போது அதில் மோடி அண்ணாமலை ஆகியோர் புகைப்படங்கள் இல்லை
 
இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் பணிமனையில் பிரதமர் மோடி அண்ணாமலை மற்றும் பாஜக கொடி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்