பள்ளி சீருடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்கள்.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (12:08 IST)
பள்ளி சீருடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்கள்.. என்ன காரணம்?
திமுக எம்எல்ஏக்கள் பள்ளி மாணவர்கள் போல் சீருடை அணிந்து போராட்டம் நடத்தியதால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் இலவச சைக்கிள் லேப்டாப் ஆகியவை வழங்கப்படவில்லை என அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான திமுக குற்றம் சாட்டி வருகிறது. 
 
இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக சைக்கிள் லேப்டாப் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என பள்ளி சீருடை அணிந்து பள்ளி மாணவர்கள் போல் பை மாட்டிக் கொண்டு சைக்கிளில் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக சுமத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்