ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்து இருந்தால் தான் இரட்டை இலை: தேர்தல் ஆணையம்

வியாழன், 2 பிப்ரவரி 2023 (19:19 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் சொல்லும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இரட்டை இலை சின்னம் குறித்த கேள்விக்கு தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார் என்றும் இரட்டை இலை சின்னத்துக்கான படிவத்தை அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கையெழுத்தில் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது
 
அதிமுக பொது குழு வழக்கு நிலுவையில் இருப்பதால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் ஒரு கட்சியின் உட்கட்சி தேர்தலை கண்காணிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்