ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (13:18 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் மற்றும் ஈபிஎஸ் வேட்பாளர் தென்னரசு ஆகியோர் போட்டியிடுவதாக இருந்தது. 
 
இந்த நிலையில் அதிமுக பொது குழு கூட்டத்தில் தென்னரசு தான் வேட்பாளர் என முடிவு செய்து அந்த முடிவை இன்று தேர்தல் ஆணையத்தில் அறிவிக்க அவைத்தலைவர் டெல்லி சென்றுள்ளார். 
 
இந்த நிலையில் இன்று ஓபிஎஸ் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த நிலையில் சற்று முன் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து இன்று செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இபிஎஸ் தேர்வு செய்த வேட்பாளரை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டதாகவே கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்