ஈரோடு கிழக்கு வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு: இன்னும் முடிவெடுக்காத அதிமுக..!

திங்கள், 6 பிப்ரவரி 2023 (09:44 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி அதாவது நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் முடிகிறது. 
 
இந்த நிலையில் இன்னும் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் இன்று டெல்லி செல்வதாகவும் தென்னரசு தான் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையத்திடம் தகவல் அளிக்க செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நாளை அதிமுக வேட்பாளர் வேட்புமனு  தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் அதிமுக ஓபிஎஸ் தரப்பிலிருந்து தென்னரசு வேட்பாளராக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தங்கள் தரப்பு வேட்பாளர் குறித்த பரிசீலனை செய்யப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டிலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட போவதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்