திருநங்கைகளை பெண்களாக அங்கீகரிக்கக் கூடாது என பெண்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் ஆண், பெண் இரு பாலினத்தை தவிர திருநங்கை, திருநம்பி என LGBTQ என்று மாற்று பாலினத்தவராக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் அதிகரித்துள்ளனர். அமெரிக்காவில் அவர்களுக்கான சலுகைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அதிபரான ட்ரம்ப் அமெரிக்காவில் ஆண், பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை என அறிவித்தார்.
அதை தொடர்ந்து மற்ற உலக நாடுகளிலும் இந்த LGBTQவை வரையறை செய்வதில் பிரச்சினை உள்ளது. இங்கிலாந்தில் திருநங்கைகளாக உள்ளவர்களுக்கு தனிப்பிரிவு இல்லாததால் அவர்கள் தங்களை ஆண் அல்லது பெண் என்று ஒரு பாலியல் அடையாளத்தில் சான்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
இதை பயன்படுத்தி பல திருநங்கைகளும் பெண் என்று அங்கீகாரம் பெற்றுள்ளதால், இங்கிலாந்தில் பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், இட ஒதுக்கீடுகளை அவர்கள் அனுபவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து இங்கிலாந்தில் உள்ள பெண் உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த இங்கிலாந்து நீதிமன்றம், திருநங்கைகள் பெண்கள் போல நடந்து கொள்வதால் பெண்கள் என அங்கீகரிக்க முடியாது என்று கூறியுள்ளதுடன், அவர்களை பெண்களாக கருதுவது சட்ட விரோதம் என்றும், அதனால் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், பெண்களுக்கான சலுகைகள் பெண்களுக்கு மட்டுமே கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை இங்கிலாந்து பெண்கள் கொண்டாடி வருகின்றனர்.
Edit by Prasanth.K