’தமிழகத்தின் ஏரி மனிதன்’ என பாரட்டப்பட்டவருக்கு கொலை மிரட்டல்? அரசு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

Prasanth Karthick

வியாழன், 17 ஏப்ரல் 2025 (11:11 IST)

சமீபத்தில் ஏரிகளின் காவலன் என முதல்வர் மு.க.ஸ்டாலினால் பாராட்டப்பட்ட நிமல் ராகவனுக்கு மிரட்டல் வருவதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாட்டின் பேராவூரணியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான நிமல் ராகவன் தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஏரிகளை தூர்வாரி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நீர் தட்டுப்பாட்டை போக்கி, நீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் பணியை செய்து வருகிறார். தற்போது தமிழ்நாடு தாண்டி பிற மாநிலங்கள், நாடுகளிலும் இவரது பணியை பாராட்டி அழைப்பு விடுக்கின்றனர்.

 

சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிமல் ராகவனை பாராட்டி பதிவிட்டதுடன், நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் சமீபத்தில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நிமல் ராகவன் “இதுல இறங்குறப்போ இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் உள்ள வந்தேன். அதிகபட்சமாக என்ன பண்ணுவீங்க? என்னைய கொலை பண்ணுவீங்க அவ்ளோதானே முடியும். நீங்க கொல்றது ஒருத்தன, ஆனா நான் உறுவாக்கி வச்சிருக்கது எத்தன பேருன்னு நான் போன அப்புறம் தெரியும்! நீரின்றி அமையாது உலகு, நீர்நிலைகளின்றி அமையாது நீர்!!” என்று பதிவிட்டுள்ளார்.

 

அவர் நீர்நிலைகளை பராமரிப்பது குறித்து யாரோ அவருக்கு மிரட்டல் விடுக்கும் நிலையில் அவர்களது அடையாளத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவரை பின் தொடர்பவர்கள் பலரும் அவருக்கு ஏதோ ஆபத்து உள்ளது போல தெரிகிறது. உடனே இதில் அரசு தலையிட்டு அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

இதுல இறங்குறப்போ இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் உள்ள வந்தேன். அதிகபட்சமாக என்ன பண்ணுவீங்க? என்னைய கொலை பண்ணுவீங்க அவ்ளோதானே முடியும். நீங்க கொல்றது ஒருத்தன, ஆனா நான் உறுவாக்கி வச்சிருக்கது எத்தன பேருன்னு நான் போன அப்புறம் தெரியும்❤️

நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி…

— Nimal Raghavan (@being_nimal) April 16, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்