பறவைகளை திறந்துவிடுங்கள்…. பிரபாஸ் பட நடிகை வேண்டுகோள் !

Webdunia
வியாழன், 28 மே 2020 (17:57 IST)
பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாஹோ படம் பல மொழிகளில் வெளியானது. இதில் பிரபாஸ் ஜோடியாக நடித்திருந்தவர் ஷ்ரத்தா கபூர்.

இவர் தனது சமூக வலைதளத்தில்  ஒரு பதிவிடுட்டுள்ளார். அதில், கொரொனா ஊரடங்கில்  அனைவரும் கூண்டில் அடைந்து கிடப்பதைப் போன்று உணர்கிறோம். இதுபோல் தான் வீட்டில் உள்ள கூண்டில் பறவைகளும் அடைந்து கிடந்து வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவிக்கின்றன என தெரிவித்துள்ளார்.

மேலும், விலங்குகளும் பறவைகளும் நம்மைப் போன்ற  உணர்வுகளைக் கொண்டுள்ளன. ஆனால் அதன் இயற்கையான வாழிடங்களில் இருந்தும், அன்பானவர்களிடம்  இருந்து அவற்றை பிரித்தால், அவை சோர்வடைகின்றன.  பறவைகளின் விலங்குகளின் சுதந்திரத்தைப் பறிக்க நமக்கு என்ன உரிமை உள்ளது? இதேபோல் அவை கூண்டுக்குள் அடைந்து கிடந்தால் வெளியே பறக்க விடுங்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்