பாதிப்பு அதிகத்தாலும் கொரோனாவில் இருந்து மீளும் சென்னை!!

வியாழன், 28 மே 2020 (14:56 IST)
சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என மாநகராட்சி தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் 817 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18545 ஆக உயர்ந்துள்ளது. 
 
நேற்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 817 பேர்களில் சென்னையில் 558 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,192 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
இந்நிலையில் சென்னையை பொருத்த வரை சென்னையின் 15 மண்டலங்களில் 5 மண்டலங்கள் 1,000 பாதிப்பை தாண்டியுள்ளது. ஆம், அதிகப்பட்சமாக ராயபுரத்தில் 2,252, கோடம்பாக்கத்தில் 1,559, திரு.வி.க.நகரில் 1,325, தேனாம்பேட்டையில் 1,317, தண்டையார்பேட்டையில் 1,262, அண்ணா நகரில் 1,046 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. 
 
இந்நிலையில் கடந்த 14 நாட்களாக பாதிப்பு இல்லாத 846 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 305 ஆக குறைந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்