செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

Mahendran

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (15:20 IST)
இந்திய அஞ்சல் துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி பதிவு அஞ்சல்  சேவை இருக்காது. அதற்குப் பதிலாக, அந்த சேவை விரைவு அஞ்சல் சேவையுடன் இணைக்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
 
அஞ்சல் விநியோகத்தை வேகமாகவும், திறமையாகவும் மாற்றுவதே இந்த முடிவின் முக்கிய நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு அஞ்சல் மற்றும் விரைவு அஞ்சல் ஆகிய இரண்டு சேவைகளையும் ஒன்றிணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் தபாலின் நிலையை எளிதாக கண்காணிக்க முடியும்.
 
பாதுகாப்பு கருதிப் பதிவு அஞ்சலை பயன்படுத்தி வந்தவர்களுக்கு, விரைவு அஞ்சல் சேவையிலும் அதே பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும். அஞ்சல் உரியவரிடம் வழங்கப்பட்டதற்கான ரசீது மற்றும் சான்று போன்ற விவரங்கள் இனி விரைவு அஞ்சலிலும் கிடைக்கும்.
 
தற்போது, விரைவு அஞ்சல் பெரும்பாலும் ஒரு நாளிலேயே விநியோகிக்கப்படுகிறது. தொலைதூர பகுதிகளுக்கு அதிகபட்சம் ஐந்து நாட்களுக்குள் சென்று சேர்ந்துவிடும்.
 
எனவே, முக்கியமான ஆவணங்களை அல்லது பாதுகாப்பாக செல்ல வேண்டிய தபால்களை அனுப்ப, வாடிக்கையாளர்கள் இனி விரைவு அஞ்சலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் இரு சேவைகளையும் பயன்படுத்தலாம்.
 
இந்த மாற்றம் அஞ்சல் துறையின் நவீனமயமாக்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்