ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (12:00 IST)
ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள் என பாஜகவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் மோடியுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் தற்போது திடீரென ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரி என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மனோரமா நியூஸ் கருத்தரங்கில் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மலையாளத்தில் உரை நிகழ்த்தினார். இதில் ஒரே நாடு ஒரே தேசிய மொழி என்பது இந்தியாவில் சாத்தியமல்ல என்றும் இந்தியாவிற்கு ஒரே ஒரு தேசிய மொழி என்பது சாத்தியமில்லை என்றும் கூறினார் அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்