ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

Siva
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (17:03 IST)
இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரும் வழி வகை செய்து விடும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற வேண்டுமென்றால் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால் இந்த மசோதா நிறைவேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தபோது, பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்த்திருந்த நிலையில் மக்களவையில் பாஜக இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது என்று தெரிவித்தார்.

மசோதாவை நிறைவேற்றுவதற்காக மெஜாரிட்டி அவர்களிடம் இல்லாத காரணத்தினால், பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்புவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த மசோதா அடிப்படையில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மாநில கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்யக்கூடிய தேர்தலை நோக்கி தான் இந்த சட்ட மசோதா நம்மை அழைத்துச் செல்லும்.

அடுத்த கட்டமாக, இந்த மசோதா அதிபர் ஆட்சி முறையை நோக்கி கொண்டு சென்று விடும் என்று அவர் தெரிவித்தார்.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்