மேகதாது விவகாரம்: முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு வருமாறு முதல்வருக்கு அழைப்பு

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (18:20 IST)
கர்நாடகா மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முடிவு செய்திருக்கும் நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழக பாஜக, அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசுக்கு கர்நாடக அரசு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது

இந்த நிலையில் மேகதாது விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய நீர்வள அமைச்சர் நிதின்கட்காரி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி தமக்கு உகந்த தேதியை குறிப்பிட்டால் அதே நாளில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த அழைப்பை ஏற்று கொள்ள கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதால் முதலமைச்சர் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்வாரா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. வரும் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் அதிக தொகுதிகளை கைப்பற்ற பாஜக போடும் நாடகம் தான் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்