எடப்பாடி நடையை கட்டும் நேரம் வந்துவிட்டது: ஸ்டாலின் அதிரடி

வியாழன், 27 டிசம்பர் 2018 (20:25 IST)
கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவுக்கு கட்சி மாறிய செந்தில் பாலாஜி இதை ஒருங்கிணைத்திருந்தார். 
 
ஆம், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 30,425 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு இவர்கள் வலு சேர்ப்பார்கள். செந்தில் பாலாஜிக்கு மட்டுமில்லாமல் இவர்கள் திமுகவிற்கு பெரிய பலமாக இருப்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார். 
 
மேலும், புதிய இயக்கத்தில் சேர இங்கிருப்பவர்கள் வரவில்லை. அவர்கள் யாரும் புதிய கட்சிக்கு வரவில்லை. இது அவர்களின் தாய் இயக்கம். பெற்றோர் நம்பிக்கையை காத்த பிள்ளையாக திமுகவில் இணைந்துள்ளனர் என பேசினார். 
 
அதோடு, நான் ஒரு விவசாயி என சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கதிராமங்களத்தில் விவசாயிகளை தடியடி நடத்தி ஓடவிட்டார். விளை நிலங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை எதிர்த்து தற்போது விவசாயிகள் போராடி கொண்டிருக்கிறார்கள். 
 
இடைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தோற்று எடப்பாடி அரசு வீட்டு போகப்போகிறது இது உறுதி என ஸ்டாலின் அதிரடியாக பேசினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்