நிபா வைரஸ் அச்சம் : தமிழக எல்லையில் முகாம் அமைக்கப்படுமா?

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (10:57 IST)
தமிழக எல்லையில் நிபா வைரஸ் நோய் பரவாமல் இருக்க முகாம் அமைக்க கோரிக்கை  எழுந்துள்ளது.

 
கேரளா மாநிலத்தில்   நிபா வைரஸ்க்கு கடந்த 18 நாட்களில் 15பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிபா வைரஸின் தாக்குதலால் கேரள மக்கள் மட்டுமின்றி, தமிழக எல்லையோர மாவட்ட மக்களும் பீதியடைந்துள்ளனர்.
 
கேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்...NiV 1998-1999 ஆண்டுகளில் மலேஷியாவில் தோன்றியது... முதலில் பன்றிகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து பரவியது. இந்த நோய்க்கு வௌவால்கள்தான்  மூல காரணி. 
 
மலேசியாவில் இந்த வைரஸ் தாக்கி இடத்தின் பெயரே இந்த வைரஸ். வௌவால் பன்றி போன்ற விலங்குகளின் சிறுநீர் எச்சில் போன்றவை மனிதர்களின் குடிநீர் உணவுப் பொருட்களில் கலக்கும்போது நோய் தாக்கும். இந்த நோயால் கடந்த 3 நாட்களில் கேரளாவில் 15 பேர் பலியாகியுள்ளனர் அதில் 4 பேருக்கு மருத்துவம் செய்த ஒரு செவிலியரும் அடக்கம்.
 
கேரளாவை ஒட்டி இருக்கும் தமிழ் நாட்டின் எல்லைகள் மூலமாக இந்த நோய் தமிழகத்தை பாதிக்கும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள புளியரையில் பன்றி காய்ச்சல்,பறவை காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் தாக்குதல்கள் உருவாகாமல் இருக்க  சுகாராதத்துறை சார்பில் நோய் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தன. 
 
தற்போது இந்த பகுதியில் அந்த முகாம் மையம் மூடப்பட்டு விட்டதால் தர்போது கேரளாவில் இந்த  நிபா வைரஸ் நோய் தாக்குதல் பரவாமல் இருக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

- சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்