கொரோனா குறையலைனா இரவு நேர ஊரடங்கு! – தமிழக அரசு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (15:47 IST)
நாளை முதல் தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகும் நிலையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படலாம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களும் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில் நாளை கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் கொரோனா தாக்கும் குறையவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கி விதிக்க நேரிடும். கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்