கொரோனா பரவலால் ரயில்கள் ரத்தாகுமா? ரயில்வேதுறை விளக்கம்

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (15:41 IST)
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதனால் ரயில்கள் போக்குவரத்து நிறுத்தப்படுமா எனக் கேள்வி எழுந்தது.

தற்போது ரயில்வேதுறை இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது: கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ரயில்கள் ரத்து செய்யும் திட்டம் இல்லை. மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்