ரேசன் கடைகளில் காலாவதி பொருட்கள்; அலுவலரே பொறுப்பு! – கூட்டுறவு சங்கம் சுற்றறிக்கை!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (10:25 IST)
தமிழக ரேசன் கடைகளில் காலாவதியான பொருட்கள் வைத்திருந்தால் ஆய்வு அலுவலரே பொறுப்பு என சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் ரேசன் கடைகளில் ஊழல் நடைபெறாமல் தடுத்தல் மற்றும் மக்களுக்கு சுத்தமான உணவு பொருட்கள் கிடைக்க செய்தல் ஆகியவற்றிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது கூட்டுறவு சங்க பதிவாளர் மண்டல ஆய்வு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு ரேஷன் கடையில் உணவு பொருட்களின் இருப்பு, வரவு மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தேங்கி காலாவதியானால் ஆய்வு அலுவலர்களே பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்