சசிகலா குடும்பத்தில் குழப்பம்: திவாகரனின் உள்ளடி வேலைகள்!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (12:23 IST)
இளவரசியின் மகன் விவேக் சட்டப் பல்கலைக்கழகத்தில் முறைகேடாக தேர்வு எழுதியதாக ஆளுநருக்கு புகார் சென்றதை அடுத்து அவர் விசாரணைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இது சசிகலா குடும்பத்தில் பூகம்பமாக வெடித்துள்ளது.


 
 
ஆளுநருக்கு விவேக்கின் சட்டப் பல்கலைக்கழக தேர்வு குறித்து புகார் சென்றதற்கு திவாகரன் தரப்புக்கு தொடர்பு உள்ளதாக விவேக் தரப்பு சந்தேகம் அடைந்துள்ளது. யார் இந்த வேலையை பார்த்தது என்பதை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்கியுள்ளார் விவேக்.
 
சசிகலாவிடம் திவாகரனின் மகன் ஜெயானந்தை விட இளவரசியின் மகன் விவேக்கிற்கு தான் செல்வாக்கு அதிகமாக உள்ளது. விவேக் சொல்வதை வேத வாக்காக கேட்கும் சசிகலா ஜெயானத் கூறுவதை அலட்சியப்படுத்துவதாக நீண்ட நாட்களாக அங்கு ஒரு பணிப்போர் நடந்து வருகிறது.
 
இதன் காரணமாகவே விவேக்கை பழி வாங்க இந்த சட்டப் பல்கலைக்கழக தேர்வு விவகாரத்தை திவாகரன் தரப்பு ஆளுநர் காதுக்கு கொண்டு சென்றதாக விவேக் தரப்பு கூறி வருகிறது. இது சசிகலா குடும்பத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்